நேற்று நாட்டை உலுக்கிய துப்பாக்கி சூடு-முழு விபரம்..!

பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று (01) அஹுங்கல்ல பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லொகு பெடீ என்ற குற்றவாளியின் தரப்பினால் பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

ரிவால்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், கட்டுமானத்தில் இருக்கும் கடைக்கு அருகில் இருந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிதாரிகள் ஸ்கூட்டரில் தாக்குதலுக்கு வரும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் குறித்த கடைக்கு அருகில் வந்த துப்பாக்கிதாரிகளுக்கு கடைக்குள் இருந்து ஒரவர் வந்த ஏதோ ஒன்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓட, துப்பாக்கிதாரி கடைக்குள் சென்று துப்பாக்கிச் சுடு மேற்கொள்கிறார்.

பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் ஏறி  தப்பிச் செல்கிறார்.

இந்த துப்பாக்கிச் சூடு அங்கிருந்த சிசிரிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் தலைப்பகுதியில் சுடப்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான மஞ்சு என்ற குசும் குமார மென்டிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டதில் உயிரிழந்த றோயல் பீச் சமனின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் பொடி பெடீ  என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்டவர் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை  என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட பல தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Auto Draft-oneindia news