நீதி” செயற்பாட்டுடன் இணைந்து ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை விளையாட்டிற்கு வழிநடத்தும் நோக்கில் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட இளைஞர்கள் பங்குபற்றிய கரப்பந்தாட்டப் போட்டி மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் (18) இன்று நடைபெற்றது.
மஸ்கெலியா பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டியானது ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிபுன தெஹிகம தலைமையில் இடம்பெற்றது.
மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் எல்லைகளுக்கு உட்பட்ட 28 பலம் வாய்ந்த கரபந்தாட்ட அணிகள் இங்கு போட்டியிட்டன.