யாழில் கடற்படையினரின் வருகை அறிந்து கஞ்சாலை எடுத்து கொண்டு தலைதெறிக்க்

வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை (17.02.2024) திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பல பொதிகளில் கடற்கரையில் கஞ்சா மூடைகள் புதைத்து வைத்திருப்பதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் திடீரென வெற்றிலைக்கேணி கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டது.

கடற்படையின் வருகையை அறிந்த கடத்தல்காரர்கள் ஏற்கெனவே கஞ்சா பொதிகளை மீட்டுக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த கடத்தலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது

Auto Draft-oneindia news