மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: குறைவடையப்போகும் வற் வரி!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 3 வீதத்தால் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலத்தில் 12 சதவீதமாக இருந்த வற் வரி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின்படி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. title=”VAT YBM” src=”https://veeramurasu.com/wp-content/uploads/2024/03/VAT-YBM.jpg” alt=”VAT YBM” width=”800″ height=”600″ class=”alignnone size-full wp-image-89294″ /> மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எதிர்காலத்தில் வற் வரியை 15 சதவீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக […]
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!
நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிபர்களிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த […]
விடுதலை செய்யப்பட்ட சட்டத்தரணி!
கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நிறைவேற்றும் வேளையில், சட்டத்தரணியின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று 2022 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரஷ்ய Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை கையளித்த சட்டத்தரணி, சட்டத்தரணிகளின் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிதி பத்மன் […]
நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!
நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் பதிவாகும் மரணங்களில் 83 சத வீதமானவை தொற்றா நோய் காரணமாக ஏற்படுபவை. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களில் புகையிலை பாவனை பிரதான காரணமாக காணப்படுகிறது.இலங்கையர்கள் புகைப்பிடிப்பதற்காக மாத்திரம் தினசரி […]
அஸ்வெசும நலன்புரித் திட்டம் இரண்டாம் கட்டம் – விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதி (சனிக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதலாம் கட்ட பெயர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற 1,227000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீட்டில் 212,000 முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகள் ஒரு தரப்பினரால் தொடர்ந்து தாக்கல் […]
வெடுக்குநாறிமலையில் காவல்துறையின் அடாவடி – வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்றை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ,மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எண்மர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை, தொல்லியல், வனவள் திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு […]
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனமுமற்றது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.
நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தற்போது பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை எதிர்வரும் அமர்வின் போது கொண்டு வருவதாக இருக்கும் தீர்மானம் எந்தவித பயனும் அற்றது என்றும் ஏற்கனவே சுகாதார அமைச்சராக கடமையாற்றி வந்த கெஹலியவிற்கும் இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு தற்போது அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். எனவே இது போன்ற பிரேரணைகள் நம்பிக்கை அற்றவை பயனற்றவை என சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
வாகனப் பதிவில் மோசடி.!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேருக்கு எதிராக இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான கார்களைப் பதிவு செய்து அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு […]
இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒருசீர் கொடுப்பனவு இடைப்பரப்பு (Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொரிஷியஸிலும்இ இலங்கையிலும் இந்த கொடுப்பனவுமுறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வீடியோ மாநாடு ஊடான பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நவுத் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். அதனூடாக பணப் புழக்கமில்லாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் […]
இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!
NPP யின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகக் கூறும் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்காலத்தில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போது ஒரு சகாப்தம் ஆரம்பித்துள்ளதாகவும் அங்கு மேலும் மேலும் ஆச்சர்யங்கள் ஏற்படும் என்றும் கூறினார். ‘எங்கள் இந்திய விஜயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவோ, ஜனாதிபதி ரணில் மூலமாகவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவின் மூலமாகவோ […]