Tag: உத்தரவு

HomeTagsஉத்தரவு

தலைமன்னார் கடற்பரப்பினுள் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (20) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 07 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார். நேற்று புதன்கிழமை (20) இரவு இலங்கை கடற்பரப்பினுல் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர். […]

சாந்தனின் உடலத்தை இலங்கைக்கு அனுப்ப கோரி சென்னை நீதிமன்று அதிரடி உத்தரவு..!

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 27-ம் திகதி உயர் […]

யாழில் புதிதாக இணைந்த மாணவன் மீது தாக்குதல்-ஆளுநர் அதிரடி உத்தரவு..!

யாழ்.நெல்லியடியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வழங்கிய பணிப்புரைக்கமைய, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக […]

புதிதாக இணைந்த மாணவன் மீது தாக்குதல் – ஆளுநர் அதிரடி உத்தரவு..!

யாழ்.நெல்லியடியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 06 இல் புதிதாக இணைந்த புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர்...

சற்று முன் ஐனாதிபதியின் விசேட உத்தரவு..!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தை நீதிமன்றின் உத்தரவு..!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது, ​​பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, […]

தர்மம் மறுபடியும் வெல்லும்-தடை உத்தரவு குறித்து சிறிதரன் கருத்து..!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சி.சிறிதரனின் சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அந்த பதிவில் – தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்! – என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய […]

ஒரு வார காலத்துக்குள் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உத்தரவு..!

இந்தியாவின் முன்னாள் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான […]

தடை உத்தரவு கேட்ட போலிசார்!! மறுப்பு சொன்ன நீதிமன்று

இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார் யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால் அரசியல்...

சாரதிக்கு இழப்பீடு.. பொலிஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

இனிவருங்காலங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வாகன சோதனையில் ஈடுபட முடியாது என இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாரம்மலவில் லொறி சாரதி...

யாழ் போதனா மருத்துவமனையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப...

அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிர்வரும்...

RECENT NEWS

Auto Draft-oneindia news