Tag: உயிரிழப்பு!

HomeTagsஉயிரிழப்பு!

இரு உழவு இயந்திரங்கள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு. இருவர் படுகாயம்.

மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிருந்து அம்பாறை பிரதேசத்திற்கு மரக்கன்றுகளை வெட்டுவதற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு உழவு இயந்திரங்களில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் மற்றைய உழவு […]

வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!

நேற்றையதினம் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது. பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். […]

யாழில் 107 வது பிறந்த நாளை கொண்டாடிய ஐயா உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் 07.03.2024 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட […]

பழம் பெரும் சிங்கள நடிகை உயிரிழப்பு..!

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார். இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

பல்கலைகழக விரிவுரையாளரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். எதிரிசூரிய ஆராச்சி – பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞான கற்கைகள் பிரிவின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விரிவுரையாளர் தனிப்பட்ட தேவைக்காக […]

யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!

சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஒரு குழந்தை […]

யாழ் கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி உயர்தர மாணவன் உயிரிழப்பு..!

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான். சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

சிவனொலி பாத மலை சென்று திரும்புகையில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

நல்லதண்ணி – சிவனடி பாத மலைக்கு செல்லும் வீதியில் ஊசி மலை பிரதேசத்தில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேளையில் நபர் ஒருவர்  கடும் சுகவீனம் உற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்   இன்று (29) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதன்னி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இவ்வாறு மரணித்தவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பி.ஏ.சிறிபால என்ற 73 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு […]

மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம்  செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

புத்தளத்தில் கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகிய இரு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  மனைவி சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 13 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த வீட்டிற்கு வந்த கணவர் மனைவியை தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதோடு காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு செல்ல விடாமல் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் காயமடைந்தவர் வீட்டினுள் வீழ்ந்து கிடந்த […]

11 வரவு செலவு திட்டங்களை தயாரித்து சாதனை படைத்த முன்னாள் நிதியமைச்சர் உயிரிழப்பு..!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில்  (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் நடந்த பயங்கரம்-குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

கிளிநொச்சியில் இனந்தெரியாத நபரின் தாக்குதலில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் படுத்துறங்கிய குடும்பஸ்தர்  ஒருவர்,   இனந்தெரியாத நபரால் பாரிய தடி ஒன்றினால் முகம் மற்றும்  தலைப்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில், படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]

RECENT NEWS

Auto Draft-oneindia news