Tag: எம்.பி

HomeTagsஎம்.பி

சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.பொலிஸார் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை(14) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இந்த சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்பதை இல்லாது ஒழிப்பதற்காக பல்வேறு செயல் திட்டங்களை இலங்கை அரசாங்கம்,அதனுடன் சேர்ந்த திணைக்களங்கள் மற்றும் புத்த பிக்குகள் மிகவும் மோசமாக வன்முறையை உறுவாக்குவதற்காகவும் எமது இனத்தை இல்லாது ஒழிப்பதற்குமான செயல்பாட்டை செய்து வருகின்றனர். இந்த நிலையிலே,தற்போது உச்ச கட்டமாக சிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்ற எம் உறவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மீது பொலிஸார் வன்முறையை உபயோகித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. என அவர் மேலும் […]

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும். – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

2019 ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர்கள் மாணவர்களது தொடர்புபட்டு செயற்படுவதால் அவர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் கொண்டுவரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார். புதன்கிழமை (7) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தர். மேலும் அவர் உரையாற்றுகையில், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு கஷ்ட, அதிகஷ்ட கொடுப்பனவுகளை வழங்கநடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் அதிபர், ஆசிரியர் போன்று […]

சற்று முன் கட்சியின் நலனுக்காக பதவியை துறந்தார் சிறிதரன் எம்.பி – புதிய தேர்தலுக்கு சம்மதம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாட்டை நடாத்துவதை தடுக்குமாறு கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்தவகையில் அந்த வழக்கானது இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கை தாக்கல் செய்தவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், டாக்டர் சத்தியலிங்கம், குகதாஸன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் தேர்தலுக்கு […]

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ..!{படங்கள்}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்  (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக அவசர திருத்தவேலைக்காக கல்வி அமைச்சினால் ஓதுக்கிடு செய்யப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய்க்கான திருத்தப்பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், பாடசாலையின் தேவைகளை பாரளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததார் இக்கலந்துரையாடலில், அதிபர் நஜாத், பிரதி அதிபர் கியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஹம்சாத் மற்றும் அசிரியர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!{படங்கள்}

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது. இதன்போது சமகால அரசியல் விவகாரம் தொடர்பாக முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலமைகள் சம்மந்தமாகவும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டது. திருகோணமலை மாவட்டத்திற்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஜப்பான் நாட்டு தூதரக பிரதிநிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (13) கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர்,  ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள […]

ஜேர்மன் தூதுவரை  சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!!

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி.!

2024 பெப்ரவரி 7 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’  – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் –  அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.  காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி  – லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்களாவர். இளைஞர்கள் மட்டத்தில் […]

கயந்த கருணாதிலக்க எம்.பி. கட்சி தாவலா?

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வைபவமொன்றில் கலந்து கொண்டுள்ளார்.ஜனாதிபதியுடன் இணைந்து அவர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டமை அரசியல் அணி மாற்றம் ஒன்றின் முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

பொதுச் சின்னத்தில்  இணையத்  தயார்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. !

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளோம் என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மன்னாரில்...

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பில்...

தமிழரசின் தலைவர் சிறீதரனுக்கு சுமந்திரன் எம்.பி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு...

RECENT NEWS

Auto Draft-oneindia news