Tag: ஒருவர்

HomeTagsஒருவர்

50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் தகராறு ; ஒருவர் மீது கத்திக்குத்து!

50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இரு உழவு இயந்திரங்கள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு. இருவர் படுகாயம்.

மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிருந்து அம்பாறை பிரதேசத்திற்கு மரக்கன்றுகளை வெட்டுவதற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு உழவு இயந்திரங்களில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் மற்றைய உழவு […]

ஒளி பாய்ச்சி மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது.

ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று(13)) ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெற்றிலைக்கேணியை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது !

கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வைக்கோலில் ஏற்பட்ட தீயில் விழுந்து ஒருவர் பலி..!

வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் வேலை செய்து கொண்டிருந்த நபரே  (01) காலை இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குறித்த வீட்டில் கொட்டகை ஒன்றை அமைக்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வீட்டின் உரிமையாளர் அவருக்கு பணி ஒதுக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். […]

வைக்கோலில் ஏற்பட்ட தீயில் விழுந்து ஒருவர் பலி..!

வைக்கோல் குவியலில் ஏற்பட்ட தீயில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.ஹொரண மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகல தல்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் வேலை செய்து கொண்டிருந்த நபரே  (01) காலை இந்த அசம்பாவித...

அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?

அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிரும் தென்னிலங்கை-சற்று முன் ஒருவர் பலி..?

அஹுங்கல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் காரைநகரில் ஒருவர் மாயம்-தேடியலையும் உறவுகள்..!

அவசர வேண்டுகோள் ***காணவில்லை*** காரைநகர் விக்காவிலை வசிப்பிடமாக கொண்ட இரத்தினம் தர்மராசா என்பவரை (28.02.2024)நேற்று 2.00மணியளவில் இருந்து காணவில்லை. இவரை கண்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்(0772718383)

யாழில் எயிட்ஸ் தொற்றால் ஒருவர் பலி..!

கடந்த வருடம்(2023) எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை,  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த வருடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த நோயின் தாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி-மற்றுமொருவர் கவலைக்கிடம்..!

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைலெவல் வீதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஊழியர்கள் மீது கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் விழுந்து காயமடைந்த ஊழியர்கள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மற்றைய நபர் களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

சற்று முன் நல்லூருக்கு முன்பாக பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RECENT NEWS

Auto Draft-oneindia news