Tag: கதி

HomeTagsகதி

காணாமல் போன வரலாற்று புத்தகத்தை தேடி சக மாணவன் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவி ஒருவரை தாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 வயது மாணவர் ஒருரை கைது செய்வது தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தனது பாட புத்தகத்தை பாடசாலையில் விட்டுச்சென்றுள்ள நிலையில், பாட புத்தகம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபரான மாணவனின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது, மாணவனின் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் சந்தேக நபரான மாணவன் இந்த மாணவியை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த […]

சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவரிற்கு நேர்ந்த கதி – படங்கள்

இன்றையதினம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டது. தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி […]

நுவரெலியாவில் வீடு உடைத்து உள்நுளைந்தவரிற்கு நேர்ந்த கதி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு தனி வீடு ஒன்றினை உடைத்து உள்நுழைந்த குற்றவாளி தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை இன்று புதன்கிழமை (20) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த குற்றவாளி வீட்டின் பின்புற நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்நுழைந்து வீட்டில் எந்தவிதமான பொருள்களையும் எடுத்துச் செல்லாமல் மீண்டும் […]

யாழ்ப்பாணம் சாட்டி கடலில் குளிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி!

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது. இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பயணத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விற்பனைக்கு வலம்புரி சங்குடன் மட்டக்களப்பு சென்ற பிக்குவுக்கு நேர்ந்த கதி..!

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரி சங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரை நேற்று (7) இரவு மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். தாண்டியடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் […]

கடலில், கடலில் வீசப்பட்ட-கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணி..!-Thinamani news

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் […]

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இன்று (07) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பு அமைந்துள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவ தினமான இன்று பகல் காணியை துப்பரவு செய்து அதன் குப்பைகளை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்த போது அதில் இருந்த கைக்குண்டு ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதில் […]

பாடசாலையில் தேநீர் அருந்திய ஆசரியைகளுக்கு நேர்ந்த கதி ..!

பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும், இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சுகவீனமுற்ற 6 பெண் ஆசிரியைகள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்-பயணிகளின் கதி..!

ஓடிக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியிலுள்ள வீடு ஒன்றுடன் கூடிய கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் சிறு காயங்களுக்குள்ளாகி மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த தனியார் பஸ் வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையத்துக்கு ஊழியர்களை ஏற்றிச் […]

காணித் தகராறு-மலையகத்தில் இருவருக்கு நேர்ந்த கதி..!

காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹல்ல பகுதியில் திங்கட்கிழமை (4) இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கடுகஸ்தோட்ட – கஹல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாலில் திகதி முடிந்த மென் பானங்களை காட்சிபடுத்திய வர்த்தகருக்கு நேர்ந்த கதி..!

சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த வாரம் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , உணவகம் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியவற்றில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த காலாவதியான சோடா மற்றும் நெக்டர் பானங்கள் என்பன மீட்கப்பட்டன. அதனை அடுத்து குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக […]

RECENT NEWS

Auto Draft-oneindia news