மன்னாரில் மிரட்டிய கடற்படை மற்றும் அதிரடிப்படை..!{படங்கள்}-Thinamani news

மன்னாரில் மிரட்டிய கடற்படை மற்றும் அதிரடிப்படை..!{படங்கள்}

இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53,ஆயிரம்  Pregabalin காப்ஸ்யூல்கள்    மருந்து வில்லைகள்     கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமான பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின் போது இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் […]

தலைமன்னாரில் மாயமான இரு கடற்றொழிலாளர்கள்!! தேடிச்சென்றவர்கள் அந்தரிப்பு!

தலைமன்னாரில் கடற்றொழிலுக்கு சென்ற இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். தலைமன்னாரில் கடற்றொழிலுக்காக படகு ஒன்றில் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் கடற்றொழிலாளர்கள் குறித்த கடற்றொழிலாளர்களை தேடி வருகின்றனர்.கடந்த (12.09.2023)செவ்வாய்கிழமை...
தென்னை மரத்தை தாக்கி வரும் 'வெண் ஈ  நோய்' தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.-Thinamani news

தென்னை மரத்தை தாக்கி வரும் ‘வெண் ஈ நோய்’ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.

வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் அதிகரித்து காணப்படுகிறது. குறித்த நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பயிர் பாதுகாப்பு சேவை நிலைய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (15) மன்னாருக்கு வருகை தந்து மன்னாரிலும் குறித்த நோய் தாக்கம் தொடர்பாக தெளிவு படுத்தி கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் வளாகத்திலும் நோய் தாக்கத்திற்கு […]
பொதுச் சின்னத்தில்  இணையத்  தயார்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. !-Thinamani news

பொதுச் சின்னத்தில்  இணையத்  தயார்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. !

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாராக உள்ளோம் என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மன்னாரில்...
மன்னாரில் குளிர்சாதனபெட்டிகள் கையளிப்பு..! {படங்கள்}-Thinamani news

மன்னாரில் குளிர்சாதனபெட்டிகள் கையளிப்பு..! {படங்கள்}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்  ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர்  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் […]
விபத்தில் பலியான அருட்தந்தை-வீதிக்கிறங்கிய மக்கள்..!{படங்கள்}-Thinamani news

விபத்தில் பலியான அருட்தந்தை-வீதிக்கிறங்கிய மக்கள்..!{படங்கள்}

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் பலியான நிலையில் தொடர்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் கபட் வீதி என்ற வகையின் வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் எனவே குறித்த […]
தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது..!-Thinamani news

தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது..!

தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். வருடந்தோறும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில்  விடுக்கும் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.      குறித்த  தவக்கால மடலில் மேலும் தெரிவிக்கையில்,,,,  திருச்சபையின் திருவழிபாட்டு […]
மன்னார் சிறுமி கொலை-சந்தேகநபருக்கு நீதமன்றில் நடந்தது என்ன..? {படங்கள்}-Thinamani news

மன்னார் சிறுமி கொலை-சந்தேகநபருக்கு நீதமன்றில் நடந்தது என்ன..? {படங்கள்}

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(17) மதியம் அனுமதி வழங்கியுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள […]
எமது நிலத்தை எம்மிடம் கொடுங்கள்-தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த மன்னார் மக்கள்..!{படங்கள்}-Thinamani news

எமது நிலத்தை எம்மிடம் கொடுங்கள்-தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்த மன்னார் மக்கள்..!{படங்கள்}

‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம்  இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு  அழுத்தத்தை வழங்கும்  நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (4) மன்னாரில் மெசிடோ நிறுவனத்தில் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது.   வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் […]
மடு வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டு..!-Thinamani news

மடு வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டு..!

இடமாற்ற கொள்கைக்கும் செயல்முறைக்கும் முரணான வகையில் மடுக் கல்வி வலயத்தில் உள்ள தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை (தரம் 1 தரம் 2 மற்றும் தரம் 3) உத்தியோகத்தர்களுக்கான இடம் மாற்ற செயல்முறை சுற்று நிரூபத்துக்கு  அமைவாக 01, 1.1 குறைந்தபட்சம் 3 வருடங்கள் சேவை காலத்தினை பூர்த்தி செய்திருப்பின் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவார்கள். அல்லாவிடில்  தகுதியற்றவராக […]

LATEST POSTS